Star Mountain

My travels and other interests

C.V.Raman (USA/Tamil)-(Feb. 10, 2019)

சி.வி.ராமன் (1888-1970)

இந்த டாக்குமெண்டரி சி.வி.ராமன் அவர்கள் இந்தியா விஞ்ஞானத்துறையில் உலகளாவிய வகையில் அடியெடுத்து வைக்க உதவியதையும், மாணாக்கர் பலரை விஞ்ஞான முன்னோடிகளாக்கப் பயிற்சி கொடுத்ததையும் நினைவில் நிறுத்தி அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவரது வழியில் இன்றும் மாணவரை அறிவியல் துறைக்கு ஊக்குவிக்கும் இந்திய ஆசிரியருக்கும் இது ஒரு அஞசலியாகும்.

சி.வி.ராமன்1930 ஆம் ஆண்டு பௌதிகத் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். இவ்வகையில் ஆசியாவிற்கே பெருமை சேர்த்தவர். 1888இல் திருவானைக்காவலில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர் விஞ்ஞானத்தின் மீது சிறு வயதிலிருந்தே தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் கல்கத்தாவில் உதவி அக்கௌன்டன்ட் ஜெனரல் வேலையில் அமர்ந்தார். ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய அங்கு வாய்ப்பு கிடைத்த தருணத்திலேயே தனது உயர் சம்பள வேலையை உதறினார். சுமார் அறுபதாண்டுகள் தனது விஞ்ஞானப்பணியைத் தொடர்ந்தார். நம் அன்றாட வாழ்வில் கண்ணுற்றும் எளிதில் புலப்படாத பல நிகழ்வுகளின் அரிய உண்மைகளை தனது விஞ்ஞான ஆற்றல் வாயிலாகக் கண்டறிந்து உலகை வியப்பிற்குள்ளாக்கினார். 1970இல் தனது 82ஆம் வயதில் காலமானார்.

விஞ்ஞான மரபைத் தோற்றுவிக்க உதவும் நிறுவனங்களையும், சிறந்த மாணவர்களையும் உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவரது “ராமன் விளைவு” இன்றளவும் பல துறைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறைவான வசதிகளைக் கொண்டே நிறைவான ஆராய்ச்சிகள் செய்ய முடியும் என்பதை இந்திய மண்ணில் நிரூபித்த அரிய மனிதரும் விஞ்ஞான முன்னோடியுமான சி வி ராமனின் எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றை இந்த டாக்குமெண்டரி சித்தரிக்கிறது.

ராமனின் பூர்வீக ஊர் மற்றும் அவர் வேலை செய்த இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிரபல விஞ்ஞானிகள் M.S. சுவாமிநாதன், C.N.R.ராவ், A.ஜெயராமன் அவர்களும், துணைவேந்தர் M.சக்ரவர்த்தியும்  ராமனோடு நெருங்கிப் பழகியவர்கள். அவர்களது நேர்காணல்கள் ராமன் என்ற மனிதரின் சீரிய பண்புகளையும், ராமன் என்ற விஞ்ஞானியின் குணநலன்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

சி.வி.ராமன்: தமிழ் (35 நிமிடங்கள்)
வெளியான ஆண்டு: 2006
காமிரா: பி.எஸ். தரன் & சீனு
படத்தொகுப்பு: கௌதம்
தயாரிப்பு: ந. முருகானந்தம் (நியூ ஜெர்சி)
எழுத்து & இயக்கம்: அம்ஷன் குமார்

Acknowledgments:

To my late wife Saradambal Muruganandam for her help with the documentary.

To Dr.A.Jayaraman (USA), the former student of CVR for his guidance with the documentary.

1 COMMENTS

Comments are closed.

You Might Also Like