பாரதி- 137 (Dec. 11, 2019)
டிசம்பர் 11, 2019- மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்த நாள். பாரதியை நினைவூட்டும் நல்ல நாள். பாரதிக்குப் பல முகங்கள் உண்டு. கவிஞன், கட்டுரையாளன், கதாசிரியன், பத்திரிக்கையாளன், தேசபக்தன், தெய்வ பக்தன், சமூக சீர்திருத்தவாதி, தீவிரவாதி, வேதாந்தி, தீர்க்கதரிசி என்று பல வகையான முகங்கள். அவைகளிலே ஒன்று உயிர்களிடையே வேற்றுமை பாராட்டாத வேதாந்தியின் முகம். “மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம், கடவுளின் மக்கள்” என்றுணர்ந்த மெய்ஞ்ஞானியின் முகம். மானிட இனம் போன்றே பூச்சிகள், பறவைகள், மிருகங்களிலும் உயர்வானவை உண்டு; அவற்றினின்றும் நாம் கற்க வேண்டியது நிறைய உண்டு என்று வேதாந்தி பாரதி கருதினார். மெய்ஞ்ஞானி பாரதி நம்பினார். உதாரணத்திற்கு பாரதி எழுதிய “சிட்டுக் குருவி” என்ற பாட்டு. இப்பாட்டில் சிறு குருவியிடமிருந்து நாம் கற்க வேண்டியன இவை, இவையென்று ஒரு பட்டியலே தருகிறார்-
1. விடுதலையுணர்வு
2. இயற்கையோடு ஒன்றி வாழ்தல்
3. பெட்டையோடு இன்புற்று வாழ்தல்; குஞ்சுகளைக் காத்தல்
4. நேரம் ஒதுக்கல்-தானியம் சேகரிக்க ஒரு நேரம், விளையாடி மகிழ ஒரு நேரம்
5. மகிழ்ச்சியுடன் தூங்கி, மகிழ்ச்சியுடன் எழுதல்
மகாகவியின் இப்பாடல் ஒரு தனிப்பாடல், சங்கீதப் பாடல், வேதாந்தப் பாடல், மெய்ஞ்ஞானப் பாடல்-
சிட்டுக்குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
சரணங்கள்
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலு
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)
(பாடல் – சுதேச கீதங்கள்- முதல் பாகம், செல்லம்மா பாரதி வெளியீடு, ஜனவரி 1922 இல் மறு பிரசுரமானது)
- Liberate your self
- Mingle with nature
- Love your spouse and guard your children
- Work while you work, play while you play
- Go to sleep happy and wake up happy
The Sparrow
O may you escape all shackles
and revel in liberty
like this
sprightly sparrow!
Roam about in endless space,
swim across the whirling air,
drink the measureless wine of the light
that flows for ever from the azure sky!
O may you escape all shackles……
Happily twittering and making love,
building a nest beyond danger’s reach
guarding the fledgling, hatched from the egg
and giving it feed and a wholesome care
O may you escape all shackles……
Gather and feast on the remnant corn
from backyards and harvested fields;
then tell strange stories and sing and rest–
and rise again at dawn with a song!
O may you escape all shackles……
– Subramnia Bharati, Year of first publication not known, his wife Chellamma Bharati republished it in Sudesa Geethangal, Volume 1, 1922.
-Translated by Prema Nandakumar in Bharati Patalkal, Tamil University Press, Thanjavur, 1999